செய்திகள் தேசிய செய்திகள் ஆனந்தமாக தொடங்கிய சுற்றுலா…. ஆற்றிற்குள் பாய்ந்த வேன்… 10 பேர் பலி… இழப்பீடு தொகை அறிவித்த பிரதமர்….!! Inza Dev15 June 2024089 views டெல்லியை சேர்ந்த 26 பேர் ஒரு வேனில் உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற வேன் ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் சாலையில் சரிக்கிக்கொண்டு அலக்நந்தா ஆற்றிற்குள் பாய்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.