செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் திடீரென கவிழ்ந்த வேன்… ஒரு வயது குழந்தை பலி… ஆரணி அருகே கோர விபத்து…!! Revathy Anish26 August 2024099 views திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்து வேன் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த நடராஜன் என்பவரின் ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 22 பேரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த 4 பெண்களை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.