காஞ்சிபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் காஞ்சிபுரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்… மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!! Revathy Anish21 July 2024065 views காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் படி உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகம், , வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரம் பகுதியில் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குளம், 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையம் மற்றும் பயிர் காப்போம் திட்டத்தில் கீழ் பயிரிடப்பட்ட பயிர்கள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.