விக்கிரவாண்டி தொகுதி… எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற அன்னியூர் சிவா… முதல்வர் வாழ்த்து…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் 2-வது இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3-வது இடத்தை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகர் வெற்றி சான்றிதழை அன்னியூர் சிவாவிற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர். இந்நிலையில் இன்று காலை 10:30 அளவில் தலைமை செயலகத்தில் வைத்து சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!