செய்திகள் சென்னை மாநில செய்திகள் மின்கட்டணத்தை எதிர்த்து குரல்… அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish20 July 20240112 views தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை எதிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. ஜிகே மணி, எம்.எல்.ஏ சிவக்குமார், வக்கீல் பானு, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது திமுக அரசு எதிர்த்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் போராட்டத்தில் பா.ம.க.வினர் தொலைக்காட்சி மற்றும் மின்விசிறி உடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.