கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… வினாடிக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பில்லூர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்ததால் 4 மதகுகள் வழியாக சுமார் 14,000 கனஅடி நீர் இன்று அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்பட்டது. இதனையடுத்து 5 மணிக்கு 9,000 கன அடியாக குறைக்கப்பட்டு மீண்டும் 6 மணிக்கு 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் கரையோரம் உள்ள ஜடையம்பாளையம், வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு, நெல்லித்துறை, ஓடந்துறை ஆகிய பகுதி மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி மூலம் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிக்கவோ யாரும் செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாசில்தார் சந்திரன், நகராட்சி தலைவர் பர்வீன், கமிஷனர் அமுதா ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர் மழையால் 80 அடியாக இருந்த சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 20 அடி உயர்ந்து 100 அடியை எட்டியது.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!