செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் மக்களுக்கு எச்சரிக்கை… ஆற்றில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு…!! Revathy Anish18 July 20240126 views திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய பயிர்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து மழை பெய்து வருவதால் 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அணையின் கொள்ளளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.