செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது…. சித்திராமையா திட்டவட்டம்….!! Inza Dev12 July 2024083 views நேற்று காவிரி மேலாண்மை வாரியம் சார்பில் தமிழகத்திற்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை ஜூலை 31 வரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டபடி தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டால் அது 11 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆகும். அவ்வளவு தண்ணீரை தற்போது திறக்க முடியாது என அதிகாரிகள் முதலமைச்சர் சித்ராமையாவிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அதுவரை காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார்.