செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் களைகட்டும் சாரல் திருவிழா… குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish18 August 20240119 views மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் படையெடுத்து வருகின்றனர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர் . மேலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாவினர் தங்களது குடும்பங்களுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து இன்று காலை குற்றாலம் சாரல் திருவிழாவில் ஆண்களுக்கு ஆணழகன் போட்டியும், பெண்களுக்கு கோல போட்டியும் நடைபெற்றது. இதில் பலரும் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.