செய்திகள் மாநில செய்திகள் புதிய மசோதாக்கள் என்னென்ன…? ஒப்புதல் அளித்த ஆளுநர்… வெளியான தகவல்…!! Revathy Anish19 July 20240110 views நடந்து முடிந்த தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அதனை பரிசீலித்த ஆளுநர் 4 சட்டத்திருத்த மசோதாக்களை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்ந்த வருவாய், மக்கள்தொகை குறைத்தல் மசோதா, ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும்போது சொத்துகளை மாற்றம் செய்வதற்கான மசோதா, சென்னை காவல் சட்டங்களை வேறு நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கான மசோதா, சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்கும் மசோதா என 4 மசோதாக்கல்லுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.