உலக செய்திகள் செய்திகள் விமானத்தில் நடந்தது என்ன…? குடும்பத்தை பார்க்க ஆசையுடன் புறப்பட்ட பெண்… திடீர் மரணத்தால் சோகம்…!! Revathy Anish2 July 2024083 views ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்பிரீத் கவுர்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற ஆசையில் சமையல் கலையை படித்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை பார்ப்பதாக மன்பிரீத் மெல்போர்ன் நகரின் இருந்து டெல்லிக்கு செல்லும் குவாண்டாஸ் விமானத்தில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் விமானத்திற்குள் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொண்ட அவர் சிறிது நேரத்திலேயே திடீரென உயிரிழந்தார். அப்போது அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் மன்பிரீத் உயிரிழந்ததை அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சோதனை செய்தனர். அதில் அவருக்கு நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.