செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் என் மகள் எங்கே…? மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகன்… போலீசார் விசாரணை…!! Revathy Anish6 July 2024079 views சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் கவிதாவின் தாயார் அமுதா தனது மகள் எங்கே என கூறி முருகனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த முருகன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அமுதாவை தாக்கியுள்ளார். இதில் பலத்தகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.