செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் சாப்பிட்டதற்கு பணம் எங்கே…? கேஷியர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்… 2 வாலிபர்கள் அதிரடி கைது…!! Revathy Anish8 July 2024078 views மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த கடைக்கு வந்த 2 பேர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனை பார்த்த உணவகத்தின் கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது அந்த நபர்கள் கத்தியை அவர் கழுத்தில் வைத்து மிரட்டி அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர்கள் அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ்(22), ஸ்ரீவசந்த்(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.