செய்திகள் மாநில செய்திகள் எந்தெந்த மாவட்ட டி.எஸ்.பி. இடமாற்றம்… 9 பேர் அதிரடி மாற்றம்… வெளியான அறிவிப்பு…!! Revathy Anish20 July 2024074 views தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.குத்தாாலிங்கம் என்பவர் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி என்பவரும், வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டி.எஸ்.பி பாலசுந்தரம் தற்போது மதுரை காவல் மாவட்ட ஊமச்சிகுளம் சப்-டிவிஷன் டிஎஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார். மேலும் தாம்பரம் காவல் ஆணையர் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த இளஞ்செழியன் தற்போது மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் 9 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.