செய்திகள் பல்சுவை வானிலை அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை…? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!! Revathy Anish14 July 2024085 views தமிழகத்தின் மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் எனவும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.