எந்தெந்த ரயில்கள் நீட்டிப்பு…? ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்… பயணிகள் மகிழ்ச்சி…!!

நாகர்கோவிலில் இருந்து பல பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் அதை நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

அதன் அடிப்படையில் திங்கள்கிழமை தோறும் தாம்பரத்தில் காலை 7.45க்கு புறப்பட்டு நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில் ஜூலை மாதம் 8,15,22 ஆகிய தேதிகள் வரையும், ஞயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் ஜூலை மாதம் 7,14,21 தேதிகள் வரை இயக்கப்பட உள்ளது.

வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் இரவு 9.40க்கு தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலி செல்லும் சிறப்பு ரயில் ஜூலை 4,6,11,13,18,20 ஆகிய தேதி வரையிலும், வெள்ளிக்கிழமை, ஞயிற்றுக்கிழமை தோறும் கொச்சுவேலியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் ஜூலை 5,7,12,14,19,21 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!