அரசியல் செய்திகள் செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல அவர் யார்…? விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி…!! Revathy Anish9 July 2024075 views மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், அப்படி இணையாவிட்டால் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும் நான் எடப்பாடி பழனிசாமி போன்று நான் தெனாவெட்டாக பேசமாட்டேன் என்று கூறிய பன்னீர்செல்வம் என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு அவர் யார் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய தி.மு.க. அரசு தவறி விட்டதாக தெரிவித்தார். மேலும் கள்ளசாராயத்தை ஒழிக்க பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.