ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் அந்த கொடூர தாய் யார்…? கட்டைப்பையில் இருந்த பச்சிளம் குழந்தை… ஈரோடு அருகே பரபரப்பு…!! Revathy Anish18 July 20240117 views ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புதரில் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கட்டை பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பச்சிளம் குழந்தை இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த பெண் குழந்தை தொப்புள்கொடி அகற்றப்பட்டு 2 கிலோ எடையுடன் நலமுடன் உள்ளார். அந்த பெண் குழந்தை பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆனதாக மருத்துவர்கள் கூறினார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிறந்த ஒரே நாளில் குழந்தையை கட்டிப்பையில் வைத்து சாலையோரம் வீசிய அந்த கொடூர தாய் யார் என்று தேடி வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.