Home செய்திகள் யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்…? கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…!!

யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்…? கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…!!

by Revathy Anish
0 comment

சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சாம்ஜ் கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் 11 பேரில் திருவேங்கடம் என்பவரிடம் விசாரணை செய்வதற்கு மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை 2 முறை சுட்டு என்கவுண்டர் செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் திருவேங்கடம் புழல் பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும், போலீசாருடன் அங்கு சென்றபோது அவர் போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் அவரை எக்கவுண்டரில் கொலை செய்ததாக தெரிவித்தனர். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என அவரது குடும்பத்தாரும், கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், போலீஸ் விசாரணைக்காக திருவேங்கடத்தை அவரச அவரசமாக அழைத்து சென்று என்கவுண்டர் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கொலை குற்றவாளியை கைவிலங்கு போட்டு தானே ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து செல்வார்கள். யாரை காப்பாற்றுவதற்கு திருவேங்கடத்தை கொலை செய்தார்கள் என சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எனவே திருவேங்கடம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.