மளமளவென பரவிய தீ… தரைமட்டமான பனியன் குடோன்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியில் இப்ராஹிம் என்பவர் பஞ்சுகழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஆலை அருகே கார்த்திக் என்பவற்றின் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனும் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவியில் நூல் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. சற்று நேரத்திலேயே அந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் பனியன் குடோன் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இதனால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!