பரவலாக பெய்யும் மழை… அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி குற்றாலம் பகுதியில் தொடந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் குளித்து செல்கின்றனர்.

மேலும் பாபநாசம், தென்காசி பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் கடந்த 3 ஆண்டை விட அணைகளில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இதனால் பாபநாசம் அணையில் 87 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 98.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 77.94 அடியாகவும், ராமநதி அணையில் 66 அடியாகவும், குண்டாறு அணையில் 32 அடியாகவும், அடவிநயினார் அணையில் 67 அடியாகவும் நீர்வரத்து இருந்து வருகிறது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!