செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் சார்ஜர் வயரால் மனைவி கொலை… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வியாசர்பாடியில் பரபரப்பு…!! Revathy Anish19 July 20240125 views சென்னை வியாசர்பாடி 2-வது தெருவில் நாகராஜன்(82), சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆகும். இவரது இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு நாகராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் சரோஜினி தூங்க அறைக்கு வராததால் அவர் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் சரோஜினி கழுத்தில் சார்ஜர் சுற்றப்பட்ட உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சரோஜினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சரோஜினி காதில் அணிந்திருந்த தங்க கம்மலை யாரோ அறுத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட வந்த மர்ம நபர்கள் சரோஜினியை கொலை செய்து விட்டு அவரது தங்க கம்மலை திருடி சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.