கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட திட்டம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… தொழிலாளி பலி…!!

கோவை மாவட்டம் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பிரபு என்பவர் தனது மனைவி லாவண்யா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவின் உடலை மீட்டு உடற்கூறாவிற்காக அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் பிரபு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பிரபுவின் மனைவி லாவண்யாவை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் உண்மை வெளியானது. லாவண்யாவுக்கும், அப்பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரேகாவுடா என்பவருடன் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இது பிரபுவுக்கு தெரிய வந்த நிலையில் அவர் லாவண்யாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லாவண்யா பைரேகாவுடன் இணைந்து பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டனர். எனவே சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பிரபுவை, லாவண்யா மற்றும் பைரேகவுடா இணைந்து அவர் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து லாவண்யா எதுவும் தெரியாதது போல் கணவர் இருந்த துக்கத்தில் இருப்பது போல் நடித்துள்ளார். இதனை கேட்ட போலீசார் லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் பைரேகவுடா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!