பெருந்தலைவருக்கு 1000 அடி சிலை நிறுவப்படுமா…? குமரி எம்.பி. கோரிக்கை…!!

கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கன்னியாகுமரியில் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜருக்கு 1000 அடியில் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும், அதன் அருகே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து சிலைக்கு அருகே வைக்கப்படும் அருங்காட்சியகத்தில் காமராஜர் பற்றிய குறிப்புகள் அனைத்தும் வைக்கப்பட வேண்டும். இதனால் காமராஜர் நாட்டிற்கு செய்த தியாகம், சேவை ஆகியவற்றை இந்த உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் அமையும் என தெரிவித்தார். மேலும் குமரியில் சுற்றுலா வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!