52
நாட்டில் ரயில்வே துறை 2-வது முக்கியமான துறையாக உள்ள நிலையில் அவைகளின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகாக இருக்கிறது. அதன் அடிப்படையில் வந்தேபாரத் ரயிலின் கட்டணத்தை குறைத்து ஏழை, எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் ஆலோசித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் அனுபவம் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.