செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுமா…? விவசாயிகள் எதிர்பார்ப்பு..!! Revathy Anish24 July 2024094 views கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு 60,771 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெளியே தெரிந்த நந்தி, கிறிஸ்தவ சிலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வினாடிக்கு திறக்கப்படுகிறது. அணையில் தற்போது 86.85 அடி தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.