மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!!

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை கடைக்கு மேல கொண்டு சென்றபோது அங்கிருந்த மின்சார கம்பியின் மீது பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் தூக்கி வீசப்பட்ட தினேஷை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சேலம் டவுன் போலீசார் தினேஷ் உடலை உடற்கூறு ஆய்விற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது அங்கிருந்த தினேஷின் மனைவி சந்தியா மற்றும் உறவினர்கள் உடற்கூறு ஆய்விற்கு சம்மதிக்காமல் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் இஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா பேச்சுவார்ததை நடத்தியபோது சந்தியா வேதனையுடன் என் கணவரின் வருமானத்தை தவிர குடும்பத்தில் வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே என் குழந்தையை வளர்க்க சம்மந்தப்பட்ட கடையின் உரிமையாளர் 30 லட்சம் இழப்பீடாக தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!