Home » “யஷ்வந்தபுரம்” வழியாக செல்லாது… நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்… ரயில்வே துறை அதிரடி முடிவு…!!

“யஷ்வந்தபுரம்” வழியாக செல்லாது… நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்… ரயில்வே துறை அதிரடி முடிவு…!!

by Revathy Anish
0 comment

தென் மாவட்டங்களில் இருந்து மும்பை, அகமதாபாத் போன்ற வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகமாக யஷ்வந்தபுரம் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் அதிகப்படியான நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சில ரயில்களை வேறு பாதையில் இயக்க முடிவு எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் நெல்லையில் இருந்து தாதர் செல்லும் “சாளுக்கியா”(11022) எக்ஸ்பிரஸ் ரயில் இன்றிலிருந்து யஷ்வந்தபுரம் வழியாக செல்லாமல் கோவில்பட்டி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஓசூர் வழியாக சென்று எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, சிக்கபானவாரா வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இயங்கும். மேலும் மறுமார்க்கமாக தாதர்-நெல்லை (11021) ரயிலும் சிக்கபானவாரா, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக நெல்லை வந்தடையும் என அறிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.