செய்திகள் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் வாலிபர்கள் செய்த செயல்… 7 வருடங்களுக்கு பின் தீர்ப்பு… புழல் சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024074 views திருவள்ளூர் மாவட்டம் ராகவரெட்டிமேடு பகுதியில் வசித்து வரும் திருச்செல்வம் என்பவர் புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டாஸ்மார்க்கில் விற்பனையான பணத்தை எடுத்துக்கொண்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென 5 வாலிபர்கள் அவரை வழிமறித்தது கத்தியால் மிரட்டி 12 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு காரில் தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து திருச்செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் சோழவரம் காவல்துறையினர் விசாரணை செய்து குற்றவாளிகளான அருண், செயசீலன் என்ற கார்த்திக், சோழவரம் அருண், பக்ருதீன், மதன்குமார் ஆகிய 5 வாலிபர்களை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இறுதியாக வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி குற்றம் செய்த 5 வாலிபர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 1000 ருபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து கைதான வாலிபர்களை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.