ZOMATO டெலிவரி முகவரால் பாலியல் துன்புறுத்தல்…வைரல் பதிவு…!!!

ZOMATO டெலிவரி முகவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் தொடர்மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சோமாட்டோவில் காஃபி ஆர்டர் செய்தேன். என்னுடைய ஆர்டர் வந்தாலும் மழை பெய்ததால் சூழ்நிலையை புரிந்துகொண்டேன். ஸ்வேதாங் ஜோஷி என்ற டெலிவரி செய்யும் நபர் என்னுடைய ஆர்டரை கொண்டு வந்தார். தாமதமானதற்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டார். பின்னர் தனது பாதத்தில் அடிபட்டதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். டார்ச் அடித்து பாதத்தை பார்க்க முயன்றபோது அவரது பிறப்புறுப்பு வெளிப்பட்டது. அப்போது அந்த நபர் சிரித்துக்கொண்டே கேலியாக தன்னிடம் உதவி செய்யுங்கள் எனக் கேட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், உடனடியாக ZOMATO நிறுவனத்திற்கு தெரிவித்ததாகவும் அவர்களின் பதில் மேலும் தன்னை துயரப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 1 மணிக்கு யாரும் பணத்தை திரும்பப்பெறுவதற்கு ZOMATO வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொள்ள மாட்டார்கள். எனக்கு நடந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் அவர்கள் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று கேட்பதாக கூறினார்கள். மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார்கள் .ஆனால் இதுவரை தொடர்புகொள்ளவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பதிவில், ZOMATO தன்னை தொடர்பு கொண்டதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனாலும், இன்னமும் நான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!