76
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் குமிழி ஊராட்சியில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 5.25 கோடி மதிப்பிலான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பள்ளியின் மாணவர் வருகை மற்றும் உணவு தரம் குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலரும் உடனிருந்தனர்.